பெருமைக்குரிய தலைவர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் நிறுவப்பட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை, தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களின் கொள்கைகளான அஹிம்சை, மதச்சார்பின்மை, சேவை மனப்பான்மையுடன் கூடிய தலைமை, தேசிய ஒருமைப்பாடு மற்றும் அனைத்து தரப்பு மக்களின் குறிப்பாக இளைஞர்களின் முன்னேற்றம் ஆகிய சிறப்பியல்புகளை நோக்கமாக கொண்டது.
பெருந்தலைவர் காமராஜர் தொலைநோக்கு பார்வையோடு அறக்கட்டளையின் பயன்பாடுகள் தொடரும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளைக்கு பெருமளவு சொத்துக்களை வாங்கி பாதுகாத்து எதிர்கால தலைமுறை காங்கிரஸ் கட்சியினரால் அதனை தொடர உறுதி செய்திருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த அறக்கட்டளை மூலமாக வசதி குறைந்த மற்றும் தகுதியான மாணவ, மாணவியருக்கு கோடிக்கணக்கான ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது