சிறந்த விருதாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக மேனாள் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு மணிக்குமார் அவர்கள் தலைமையில் நடுவர்க் குழு அமைக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் மேனாள் தலைமை விஞ்ஞானியான, திருமதி சௌமியா சுவாமிநாதன் அவர்களும், சன் நியூஸ் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் திரு. குணசேகரன் அவர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
விருதுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கவும், விருந்து வழங்கும் நிகழ்ச்சியினை சீரிய முறையில் நடத்தவும் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளையின் தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. அவர்கள் தலைமையில் ஒரு ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்திருக்கிறோம். இந்த விருது வழங்கும் விழா முன்னாள் பாரத பிரதமர் திரு. ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்தநாளான 20.08.2025 அன்று நடைபெறவுள்ளது