தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ அவர்களின் வழிகாட்டுதலில், அறக்கட்டளையின் செயல்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதன் ஒரு பகுதியாக இந்த வருடம் 2025 – 26 அறக்கட்டளையின் சார்பில் நம் தேசத்திற்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்து காந்தியடிகளின் பாதையை பின்தொடர்ந்த தேசிய தலைவர்களை போற்றும் விதத்தில் அவர்களது பெயரில் இந்த சமூகத்திற்காக தங்களை அர்பணித்துக்கொண்ட தனிநபர்கள் அல்லது அமைப்புகளை கண்டறிந்து, அவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவம்

** தங்களின் பரிந்துரைகளை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு நேரடியாக அனுப்பியும் விண்ணப்பிக்கலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். **

தேர்வு செய்யப்பட விருதாளர் ஒவ்வொருவருக்கும் அவர்களின் சேவையை கௌரவிக்கும் நோக்கத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

பொதுமக்கள் விருதுகளுக்கான பரிந்துரையுடன் அவர்களின் பெயர், முகவரி, மின்னஞ்சல், மொபைல் எண் மற்றும் பரிந்துரை செய்யும் நபரின் பங்களிப்பு விவரங்களை சுருக்கமாக அனுப்பி வைக்க வேண்டும்.

பரிந்துரைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

சிறந்த விருதாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக மேனாள் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு மணிக்குமார் அவர்கள் தலைமையில் நடுவர்க் குழு அமைக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் மேனாள் தலைமை விஞ்ஞானியான, திருமதி சௌமியா சுவாமிநாதன் அவர்களும், சன் நியூஸ் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் திரு. குணசேகரன் அவர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

விருதுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கவும், விருந்து வழங்கும் நிகழ்ச்சியினை சீரிய முறையில் நடத்தவும் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளையின் தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. அவர்கள் தலைமையில் ஒரு ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்திருக்கிறோம். இந்த விருது வழங்கும் விழா முன்னாள் பாரத பிரதமர் திரு. ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்தநாளான 20.08.2025 அன்று நடைபெறவுள்ளது

ஒருங்கிணைப்புக்குழு தலைவர்

திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. அவர்கள்

தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்

துணைத்தலைவர்

டாக்டர் ஈ.எம்.. சுதர்சன நாச்சியப்பன், Ex.MP அவர்கள்

மேனாள் ஒன்றிய அமைச்சர்,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை உறுப்பினர்

இணைத் தலைவர்கள்

திரு. எஸ். ராஜேஷ் குமார், எம்.எல்.ஏ. அவர்கள்

தலைவர், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி

திரு. கே.வி. தங்கபாலு, Ex.MP., அவர்கள்

மேனாள் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

திரு. சு. திருநாவுக்கரசர், Ex.MP., அவர்கள்

மேனாள் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

திரு. எம். கிருஷ்ணசாமி, Ex.MP., அவர்கள்

மேனாள் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

திரு. கே.எஸ். அழகிரி, Ex.MP., அவர்கள்

மேனாள் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

செயலாளர்

திரு சா.பீட்டர் அல்போன்ஸ், Ex.MP., அவர்கள்

தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் இயக்க சீரமைப்புக்குழு
மேனாள் தலைவர், தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையம்

நடுவர்க் குழு

தலைவர்

திரு மணிக்குமார் அவர்கள்

மேனாள் கேரள உயர்நீதிமன்ற
 தலைமை 
நீதிபதி

உறுப்பினர்

திருமதி சௌமியா சுவாமிநாதன் அவர்கள்

உலக சுகாதார நிறுவனத்தின் மேனாள் தலைமை
 விஞ்ஞானி

உறுப்பினர்

திரு. குணசேகரன் அவர்கள்

சன் நியூஸ் தொலைக்காட்சியின் தலைமை செய்தி 
ஆசிரியர்

தேவைப்பட்டால், நடுவர்க் குழு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களை நேரில் அழைத்து கூடுதல் தகவல் பெறலாம். தேர்வுக் குழுவின் முடிவுகள் இறுதியானது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளைக்கு முடிவுகளை எடுப்பதற்கும் அல்லது நிராகரிக்கவும் அனைத்து உரிமையும் உள்ளது.